உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கி பயனர்களை அச்சுறுத்தும் 17 மோசடியான ஆண்ட்ராய்டு ஆன்லைன் லோன் ஆப்களை ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. அது குறித்த பட்டியலையும் கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில் பெரும்பாலும் கடன் செயலிகள் மூலமாக அதிக அளவிலான மோசடிகள் நடைபெறுகிறது. அதனால் கூகுள் தற்போது இது தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

– AA கிரெடிட்
– Amor Cash
– GuayabaCash
– EasyCredit
– cashwow
– CrediBus
– FlashLoan
-PrestamosCredit
– Credit Loans-YumiCash
– Go Credit
– உடனடி டெலிவரி
– Cartera Grande
– Rapid Credit
Finupp Lending
– 4S Cash
– TrueyNai Cash