பஞ்சாப் மாநிலத்தில் கணவனே தனது மனைவியை கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில், அந்த நபர் தனது மனைவியை தாக்கி உயிர் இழந்ததை உறுதி செய்துள்ளார்.
இந்த கொடூரச் செயலைச் செய்ததோடு நிறுத்தாமல், ரத்தம் படிந்த நிலையில் “நான் அவளைக் கொன்றுவிட்டேன்” என்று கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவேற்றி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குற்றவாளியான கணவர் தப்பியோட முயன்ற நிலையில், அவர் பதிவிட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். ஒரு உயிரைப் பறித்ததோடு மட்டுமல்லாமல், அதைச் சமூக வலைதளத்தில் பெருமையாகப் பதிவிட்ட அந்த நபரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
