கேரள மாநிலத்தில் உள்ள இருவழிச்சாலை ஒன்றில், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக வந்த கார் ஒன்று முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“>

 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.