மாதம்பட்டி ரங்கராஜிற்கு ஸ்ருதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் தற்போது அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜன்.

பிரபல சமையல் கலை வல்லுனரான மாதம்பட்டி ரங்கராஜன் பிரபலங்களில் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் சென்று சமையல் செய்து கொடுக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு ரிலீசான மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜன் தனது மனைவியை விட்டு பிரிந்து ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸ்டல்டாவை கோவிலில் வைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். ஜாய் கிரிஸில்டா தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நேற்று திருமணம் அதற்குள் ஆறு மாச கர்ப்பமாக உள்ளாரா என ஷாக்கில் உள்ளனர். மேலும் சிலர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by J Joy (@joycrizildaa)