லாகூர் காவல்துறை ஏஎஸ்பி ஷெர்பானோ நக்வி, ஒரு போட்காஸ்ட் நேர்காணலின் போது திடீரென ஒரு கொலை வழக்கிற்காகச் சென்று, ஒரு மணி நேரத்திலேயே அந்த வழக்கை முடித்துவிட்டு போலீஸ் திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் கேலிக்குள்ளாகி வருகிறது.
நேர்காணலின் போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒரு கொலை நடந்திருப்பதாகத் தகவல் கிடைத்தவுடன், “ஒரு கொலை நடந்துவிட்டது, நான் இப்போதே சென்று வருகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சரியாக ஒரு மணி நேரம் கழித்துத் திரும்பிய அவர், பணத் தகராறு காரணமாக நண்பனைத் திட்டமிட்டு நண்பனே கொன்றதாகவும், காவல்துறை கொலையாளியை உடனடியாகப் பிடித்து அங்கிருந்த குழந்தையை மீட்டதாகவும் விளக்கமளித்தார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு நாடகம் போல இருப்பதாக இணையவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “யார் இந்த ஸ்கிரிப்ட் எழுதுவது?”, “மிகச் சிறந்த நடிப்பு”, “ஒரே மணி நேரத்தில் ஒரு கொலை வழக்கை முடித்துவிட்டுத் திரும்புவது ஆச்சரியமாக இருக்கிறது” எனப் பலரும் கிண்டலான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
کسی مہذب معاشرے میں ایک پولیس افسر یہ ناٹک کرتی تو اُسے نا صرف برطرف کیا جاتا بلکہ جیل ہو جاتی ! ایک گھنٹے میں FIR نہیں لکھی جاتی اس نے نا صرف قاتل پکڑ لیا وجہ قتل اور ساری کہانی میڈیا پر بتا دی عدالتیں جس کام میں سالوں لگا دیتی ہیں اس نے ایک گھنٹے میں کر دیا ۔۔ واہ دی دی واہ pic.twitter.com/1loxSxQGWV
— AliZai Vlogs (@alizaihere) December 21, 2025
“>
கடந்த ஆண்டு அரபு எழுத்துக்கள் பொறித்த ஆடை அணிந்த பெண்ணை மத நிந்தனை கும்பலிடமிருந்து காப்பாற்றிப் பாராட்டு பெற்ற ஷெர்பானோ, தற்போது இந்த வீடியோ மூலம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
