காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ நிகழ்ச்சியில், அவர் உரை நிகழ்த்தாதது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவை தனது பரப்புரை வாகனத்தில் ஏற்றி அறிமுகம் செய்த விஜய், அவருக்காகத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

​இருப்பினும், தேர்தல் ஆணையம் விதித்துள்ள பரப்புரைக்கான நேரம் கடந்துவிட்டதால், விஜய் பொதுமக்களிடையே உரையாற்ற முடியாமல் போனது. இதனால் நீண்ட நேரமாகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.