நெஸ்லே நிறுவனம் குழந்தைகளுக்கான செர்லாக்கில் விதிகளுக்கு மாறாக சர்க்கரையை சேர்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உடல் பருமன் மற்றும் பிற நோய்களை தடுக்க பச்சிளம் குழந்தை உணவுப்பொருளில் சர்க்கரை சேர்க்கக்கூடாது என்று சர்வதேச வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி இந்தியாவில் 3 கிராம் அளவு சேர்ப்பதும் வளர்ந்த நாடுகளில் சேர்ப்பதில்லை என்றும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து நெஸ்லே இந்தியாவின் செய்தி தொடர்பாளர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், நாங்கள் அனைத்து உள்ளூர் விதிகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதாகவும் கடந்து ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே அதன் குழந்தை தானிய வரம்பில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகளை 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.