தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக மக்களுக்கு உருக்கமான மற்றும் ஆவேசமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தனது அரசியல் வருகையின் முதல் நாள் முதலே திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் சொல்லொணா நெருக்கடிகளையும், அழுத்தங்களையும் கொடுத்து வருவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கு விஜய் ஒருபோதும் அடிபணியமாட்டான்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தவெக என்பது அளக்க முடியாத ஆழ்கடல் போன்றது எனத் தனது வலிமையை வெளிப்படுத்தியுள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம்விட்டுப் பேசவே இக்கடிதம்.
எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே…
— TVK Vijay (@TVKVijayHQ) April 21, 2026
“>
மேலும், ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், மாற்றத்தை விரும்புவோர் அனைவரும் தவெக-வின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்து ஒரு “விசில் புரட்சியை” ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். விஜய்யின் இந்த நேரடி அரசியல் தாக்குதல் தமிழக தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
