காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த கொடூரச் செயலில் சுமார் 8 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள அந்த 8 நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடங்களில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.