ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு குறித்து உலக அளவில் மிகப்பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாய் பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது போன்ற ஒரு காணொளி வெளியிடப்பட்டது. ஆனால், அந்த வீடியோவை உன்னிப்பாகக் கவனித்த நெட்டிசன்கள், அது நிஜமான வீடியோ அல்ல, ‘ஏஐ’ (AI – Artificial Intelligence) மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்று ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர்.
வீடியோவில் நெதன்யாகுவின் உடல் மொழியும், உதடு அசைவுகளும் ஒத்துப் போகவில்லை என்றும், இஸ்ரேல் தனது பிரதமர் கொல்லப்பட்டதை மறைக்க இதுபோன்ற தந்திரங்களைச் செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. “ஒருவேளை நெதன்யாகு உயிருடன் இருந்தால் ஏன் நேரலையில் (Live) தோன்றிப் பேசவில்லை?” என்ற கேள்வியை ஈரான் ஆதரவு ஊடகங்கள் எழுப்பி வருகின்றன. இதனால் போர் முனையைத் தாண்டி, இப்போது நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற விவாதம் சர்வதேச அளவில் ஒரு த்ரில்லர் சினிமா போல மாறிவிட்டது. இஸ்ரேல் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் வராததால் இந்த மர்மம் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
