ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர்-ஜோத்பூர் சாலையில் நடந்த கோர விபத்தில், பயணிகள் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஏசி சிஸ்டத்தில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக இந்த துயரம் நிகழ்ந்தது. இந்த பயங்கரமான தீ விபத்தில் சிக்கிய பலரது வாழ்க்கையும் நொடியில் தலைகீழாக மாறியது.
இந்தத் துயரத்தின் நடுவே, ஒரு வீடியோ பரவி, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த விபத்தில் இரு பெற்றோரை இழந்த இரண்டு சின்னஞ்சிறு சகோதர, சகோதரிகள், கருகிய பேருந்து இடிபாடுகளுக்கு இடையில் ஒருவரையொருவர் இறுக்கமாக அணைத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்லிக் கொண்டனர். அந்தச் சிறு குழந்தைகள், ஒருவருக்கொருவர் காட்டிய அன்பு, இந்தச் சோகக் கதையில் மறக்க முடியாத ஒரு தருணமாக மாறியுள்ளது.
पिछले दिनों जैसलमेर बस हादसे में अपने माता-पिता को खोने के बाद…
दो मासूम रोते बिलखते एक दूसरे को हौसला दे रहे हैं..
ये विडियो वाक़ई आँखें नम कर गया…
इससे ज़्यादा कठोर और नियति क्या होगी…!!! pic.twitter.com/UFlzcAjtlD
— kapil bishnoi (@Kapil_Jyani_) November 1, 2025
