மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து மெஹவ் நகருக்கு நேற்று இரவு 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்ரோல் நகர் அருகே பெரு ஹட் பகுதியில் அமைந்துள்ள மலைப்பாங்கான பாதையில் பேருந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
VIDEO | Two women were killed and 38 people injured when a passenger bus fell into a gorge in Indore district of Madhya Pradesh on Monday night. Superintendent of Police (Rural) Yangchen Dolkar Bhutia told PTI that the accident occurred at Bheru Ghat in the Simrol police station… pic.twitter.com/OjeyLHgltf
— Press Trust of India (@PTI_News) November 4, 2025
“>
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்ததும், போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோரை மீட்டு இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, அம்மாநில முதல்வர் மோகன், தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
