கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிச.25) அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் சுமார் 17 பயணிகள் உயிரிழந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில், பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த கோர விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில், உறக்கத்திலிருந்த பயணிகள் வெளியே வர முடியாமல் தீயில் கருகி பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

“>

 

விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.