நடிகை பிரியங்கா சோப்ரா மும்பை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் வெளியே செல்லும் போது, கால் ஊனமுற்ற ஒரு நபர் உதவி கேட்ட போது உடனடியாக பண உதவி வழங்கினார். இந்த மனிதநேயமிக்க செயல், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. அதாவது சமீபத்தில், பிரியங்கா சோப்ரா தனது சகோதரர் சித்தார்த் சோப்ராவின் நீலம் உபாத்யாயாவுடன் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றார். திருமண விழாவிற்குப் பிறகு, அவர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த உதவியை செய்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா தற்போது SSMB 29 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் இந்த படம், உலகம் முழுவதும் நடக்கும் ஒரு அட்வென்ச்சர் படமாக உருவாகிறது. மகேஷ் பாபுவுடன் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கான வேலைகள் 2026ஆம் ஆண்டிற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.