நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும் நாளைக்கு நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் இந்த மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.. இந்த கன மழை தொடரும் என்று சொன்னால் கூட வரும் நாட்களில் மழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை தமிழகம் முழுவதும் பரவலாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மழை படிப்படியாக குறையும் என புரிந்து கொள்ளலாம். சென்னையை  பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.. மீனவர்களுக்கான எச்சரிக்கையை  பொறுத்தவரை தமிழக கடலோர பகுதியான மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதி, மத்திய மேற்கு வங்க கடல், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 65 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

இலங்கை கடலோர பகுதி, தென்மேற்கு வங்ககடல், அந்தமான் கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர்  வேகத்தில் காற்று வீசும் எனவும் செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று முன்தினம் இயல்பை விட 58% குறைவான மழை பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே கேரளா, கர்நாடகாவில் தொடர்ச்சியாக  கனமழை பெய்ததன் காரணமாக நேற்றைய தினம் 42% ஆக குறைந்தது. அதேபோல கர்நாடகாவிலும் அதற்கு முன்தினம் 48% இயல்பை விட குறைவான மழை பதிவானது. நேற்று 38 சதவீதமாக குறைந்தது. இதே போல கேரளா, கர்நாடகாவில் மிதமான கனமழை 2 நாட்களுக்கு தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.