
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதல் விவகாரம் தொடர்பாக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேப்பிலைப்பட்டி மற்றும் திருமானூர் கிராமங்களில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இதனால் வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் இரு கிராமங்களைச் சேர்ந்த சமூகத்தினர் சண்டை போட்டுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.