விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் புதுவிதமான தலைப்புகளுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி இந்த வாரம் பக்தி பாடல் பாடுபவர்கள் அதனை ரசிக்கும் ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்ட நிலையில் அதில் இஸ்லாமிய பெண் ஒருவர் இந்துக்களின் பக்தி பாடலை அற்புதமாக பாடி அசத்தினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.