ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார்.அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய முதல் திரைப்படம் வெயில். அந்தப் படத்தில் இவர் இசையமைத்த வெயிலோடு உறவாடி என்ற பாடலினால் படம் ஹிட்டானது எனக் கூறுவர். வருடத்திற்கு 3 படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் கடைசியாக இசையமைத்த திரைப்படம் அசுரன் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில்  G.V.பிரகாஷ், சிறுவன் ஒருவருக்கு பண உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஆன்லைனில் விளம்பரப்படுத்தப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு 75,000 அனுப்பிய ஜி.வி.பிரகாஷ், என்னால் முடிந்த சிறிய உதவி என குறிப்பிட்டுள்ளார். G.V.பிரகாஷின் இந்த செயலை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.