இந்தியாவில் பிரபல சமூக ஊடகமான வாட்சப் மூலம் பகிரப்படும் பல்வேறு சைபர் குற்றங்கள் மற்றும் பொருளாதாரம் மோசடிகளுக்கு எதிராக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும், போலீஸ் சிந்தனை குழுவான பி பி ஆர் டி என்ற போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், whatsapp தகவல் பரிமாற்ற ஊடகத்தை பயன்படுத்தி ஏழு விதமான மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

வீடியோ அழைப்பு, வேலை வாங்கி தருவதாக வரும் அழைப்புகள், முதலீட்டு திட்டங்கள், ஆள் மாறாட்டம், மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுதல், மொபைல் போனை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது மற்றும் மிஸ்டுகால் உள்ளிட்ட பல வழிகளில் முறைகேடுகள் நடைபெறுகிறது. இதில் ஆள்மாறாட்டம் மோசடியில் whatsapp பயனர்களில் மொபைல் போனை தங்களுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு தொடர்பில் உள்ள நபர்களிடம் பணம் கேட்டு முறைகேடில் ஈடுபடுகின்றனர்.

வாட்ஸ் அப் வீடியோ அனுப்பு மூலம் ஆபாச உரையாடல் மற்றும் ஆடைகள் இல்லாமல் உரையாடி அந்த காட்சிகளை வைத்து மிரட்டி பணம் பறிக்கின்றனர். வெளிநாட்டு எண்களில் இருந்து மிஸ்டு கால் வருவதும் அதிகரித்துள்ளது. எனவே இது போன்ற அழைப்புகளை ஏற்க வேண்டாம். அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வாட்ஸப் தகவல்கள் மட்டும் அழைப்புகளை நிராகரிப்பது நல்லது என மத்திய அரசு எச்சரித்துள்ளது.