இந்தியாவில் மத்திய அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கான உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பயனுடைய இந்தியாவில் வசிப்பவராகவும், நிரந்தர வீடு இல்லாதவராகவும் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம். இதில் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரரின் பெயர் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். 25 வயதிற்கு மேற்பட்ட கல்வி அறிவற்ற குடும்பம், 16 முதல் 59 வரையிலான வயது வந்த ஆண் உறுப்பினர்கள் இல்லாத குடும்பம், 16 முதல் 59 வயது வரை உள்ள எந்த உறுப்பினரும் இல்லாத குடும்பம், உடல் ஊனமுற்றவர்கள் உள்ள குடும்பம், சாதாரண வேலை மூலமாக வருமானம் ஈட்டும் நிலையற்ற குடும்பங்கள், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய முடியும். இதில் விண்ணப்பிக்கும் நபர்கள் ஆதார் அட்டை, புகைப்படம், வேலைய அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பத்தாளர்கள் https://pmaymis.gov.in என்ற இணையதளத்தில் இலவச வீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது பொது சேவை மையத்தை அணுகலாம்.