
பீகார் மாநிலம் சமஸ்திபூரில் ஒரு பாலம் அமைந்துள்ளது. இங்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் திடீரென பிரஷர் கசிவு ஏற்பட்டது. இதனால் திடீரென பாலத்தில் நடுவே ரயில் நின்றது. இந்த பிரச்சினையை சரி செய்தால்தான் ரயில் முன்னோக்கி நகர முடியும் என்ற நிலை இருந்தது. இதனால் ரயிலின் லோகோ பைலட் தண்டவாளத்தில் இறங்கி பிரச்சனையை சரி செய்ய முடிவு செய்தார்.
அவர் தன்னுடைய உயிரை கூட பொருட்படுத்தாமல் தண்டவாளத்தில் நுழைந்து ரயிலுக்கு அடியில் நுழைந்தார். பின்னர் எஞ்சின் பிரஷர் கசிவை அவர் சரிசெய்தார். இந்த பிரச்சனையை சரி செய்த பிறகு அவர் ஊர்ந்து வெளியே வந்தார். மேலும் பயணிகளின் உயிரைக் காக்க தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல் துணிச்சலாக இறங்கி ரயிலில் பிரச்சனையை சரி செய்த லோகா பைலட்டை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram