இந்தியாவில் வாரிசுரிமை சட்டத்தின் படி ஆண், பெண் இருவருக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. கடந்த 1956 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி ஆண் பெண் இருவருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் 2005 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட நிலையில் மகள்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்பதை நிலை நிறுத்தியது. இருப்பினும் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் மகள் மற்றும் மகன் இருவருக்கும் சம உரிமை இருக்கும் பட்சத்தில் அதில் பெண்களுக்கு பங்கு கொடுக்கவிட்டால் அவர்கள் சட்டப்படி சொத்தை பெற நடவடிக்கை எடுக்கலாம்.
அதே நேரத்தில் தந்தை சுயமாக சம்பாதித்து வீடு, நிலம் மற்றும் பிற சொத்துக்களை வாங்கியிருந்தால் அதில் மகன் மற்றும் மகள் என இருவருமே உரிமை கோர முடியாது. இந்த சொத்துக்களை தந்தை யார் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என விருப்பப்படுகிறாரோ அவருக்கு எழுதி வைக்கலாம். ஒருவேளை தந்தை தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மகனுக்கு எழுதிவைக்க விருப்பப்பட்டால் மகள்களால் எதுவுமே செய்ய முடியாது. இதை எதிர்த்து அவர்கள் சட்டத்தை அணுகவும் முடியாது. மேலும் திருமணம் ஆன பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
