
வெயில் காலத்தில் நம் போன் சீக்கிரம் சூடாக மாறுவதை உணரலாம். இதன் காரணமாக போனின் பேட்டரி மிகவும் பாதிக்கும். அதுமட்டுமின்றி போன் சூடாவதால் அது ஹேங்காகும். இந்நேரத்தில் போனை எப்படி கூல் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இதனிடையே போன் அதிக சூடானால் வெடிக்கவும் வாய்ப்புள்ளது. இதனால் வெயில் காலத்தில் அதிக நேரம் போனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
அதேபோல் சூரிய ஒளிக்கு நேராக போனை வைத்திருப்பதை தவிர்க்கவும். அதிலும் குறிப்பாக சூரிய ஒளிக்கு நேராக போனை பயன்படுத்தும்போது வெப்பத்தை அதிகம் ஈர்க்கக்கூடும். நாம் பயன்படுத்தக்கூடிய மொபைல் கவர் கூட நம் போனின் எதிரியாக மாறக்கூடும். ஆகவே உங்கள் போன் ஹீட்டாவதாக உணர்ந்தால் கவரை உடனே நீக்குவது நல்லது. சூரிய ஒளிபடும் இடங்களில் போனை சார்ஜ் போடுவதை தவிர்க்கவும்.
அதோடு சார்ஜ் செய்யும் போது கவரை நீக்குங்கள். உங்களின் அறை எப்போதும் சூடாக இருப்பதாக உணர்ந்தீர்கள் எனில், கூலிங் பேட் பயன்படுத்துங்கள். இந்த கூலிங் பேட் Online-ல் கிடைக்கும். இது உங்களது போனை விரைவில் கூலாக்கும். மேலும் பயன்படுத்தாத நேரங்களில் போனில் ப்ளூ டூத் மற்றும் ஜிபிஎஸ் ஆஃப் செய்ய வேண்டும்.