இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் தூங்கும் போது மொபைல் போனை அருகில் வைத்து தூங்குவதால் பல பிரச்சனைகளை சந்திப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 90% இளம் வயதினர் 68 சதவீதம் பெரியவர்கள் தங்கள் தலையணைக்கு அருகில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு தூங்குகின்றனர். இது பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

மொபைல் போனிலிருந்து வரும் கதிர்வீச்சை தவிர்க்க தூங்கும் போது ஸ்மார்ட் போனை ஒதுக்கி வைக்க வேண்டும். முடிந்த அளவிற்கு தூங்கும் போது மொபைல் போன்களை குறைந்தது 3 அடி தூரத்தில் வைக்க வேண்டும். இதனால் மொபைல் வெளியிடும் ரேடியோ அலைவரிசை மின்காந்த ஆற்றலை குறைக்கிறது. இதனால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மொபைல் போன்களை அருகில் வைத்துக் கொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது மொபைல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சு தசை வலி மற்றும் தலைவலிக்கு வழி வகுக்கின்றது. மொபைல் போனிலிருந்து வெளிவரும் நீல ஒளி தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் தூக்கத்தை கெடுக்கும். எனவே இனி தூங்கும்போது மொபைல் போனை 3 அடி தூரத்தில் வைத்து தூங்குவது நல்லது.