கர்நாடக மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மே பத்தாம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் அதன் முடிவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் 137 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி அரசியல் வட்டாரங்கள் மத்தியில் எழுந்து வரும் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சித்த ராமையா இரண்டாவது முறையாக முதல்வர் ஆகிறார் என அவர் வீட்டில் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.