தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் நேற்று முன்தினம் இரவு அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்தது. இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 560 கிலோமீட்டர்  வடமேற்கே நிலை கொண்டுஇருந்தது.
இதனையடுத்து புயல்  காக்ஸ் பஜாருக்கு இடையில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை கடக்க தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தகவல் தெரிவித்துள்ளது.