இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளி வெளியானது. அதில் இரு நண்பர்கள் சேர்ந்து ஒரு பிஜிலி வெடியை பெவிகுயிக் தடவி, அந்த வெடியை மூன்றாவது நண்பருக்கு கொடுக்கிறார்கள். அந்த நண்பர் வெடியை கையில் வாங்கினால், பெவி குயிக் அவர் கையில் ஒட்டிக் கொள்கிறது. இதை அவர் அறியாமலேயே, வெடியை பற்றவைக்க முயற்சி செய்கிறார். உடனே அது அவரது கையிலேயே வெடித்துவிடுகிறது.

இதில் அந்த நண்பர் வலியால் துடித்து கொண்டிருப்பது காணொளியில் பதிவாகியுள்ளது. இந்த காணொளி வைரலாகி, பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிராங்க் என்று சொன்னாலும், ஒருவரின் கையை காயப்படுத்துவது மிகவும் தவறு. இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.