ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசுகளை கண்டுபிடித்த சீனா, இன்றும் அந்த தொழிலில் உலகின் ராஜா என்று பெருமையுடன் நிற்கிறது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பத்திலும் சீனா முன்னேறி வருகிறது அதற்கு அந்நாட்டின் ட்ரோன் காட்சிகள் எடுத்துக்காட்டு. உதாரணமாக, இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியாகி, பார்க்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், மிகப்பெரிய அளவில் வானவேடிக்கை நடந்திருக்கிறது. வானத்தில் பிரகாசிக்கும் அந்த அழகு, பார்வையாளர்களின் கண்களை கவர்ந்து விட்டது.

இந்த வீடியோவில் சீனா காட்டிய வானவேடிக்கை அற்புதமாக இருந்தது. அது இவ்வளவு பெரிய அளவிலும், வண்ணமயமாகவும் இருந்ததால், பார்ப்போர் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றனர். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் பட்டாசு மட்டுமல்லாமல் அதன் தொழில்நுட்ப வளர்ச்சியும் தான் பட்டாசுடன் சேர்ந்து ட்ரோன் இந்த வான வேடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது அதுவே இத்தகைய பிரம்மாண்டமான காட்சியை மக்களுக்கு கொடுத்துள்ளது இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, மில்லியன் கணக்கான பேர் பார்த்து வருகிறார்கள். சீனாவின் இந்த சாதனை, அவர்களின் பட்டாசு திறனை உலகிற்கு மீண்டும் நினைவூட்டுகிறது.