பிரபல நடிகையும் பாஜக கட்சியின் எம்.பியுமான கங்கனா ராணாவத்தை ‌ பெண் அதிகாரி குல்வீந்தர் கவுர் என்பவர் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து கன்னத்தில் அறைந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ததோடு அதிகாரிகள் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த அதிகாரி டெல்லியில் போராடிய விவசாயிகளில் தன் தாயும் ஒருவர் என்றும் அவர் தன் தாயைப் பற்றிய தப்பா பேசியதால்தான் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியுள்ளார். அதாவது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் என கங்கனா பேசியுள்ளார்.

இதனால்தான் அதிகாரி அவரை அடித்ததாக கூறப்படும் நிலையில் அந்த அதிகாரிக்கு ஆதரவுகள் பெருகி வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கானா இன்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், திருட்டு, கற்பழிப்பு, கொலை ஆகியவற்றில் ஈடுபடுபவர்களுக்கு கூட உடல் ரீதியாக மனரீதியாக காரணங்கள் இருக்கிறது. காரணம் இல்லாமல் யாரும் குற்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது. காரணம் இருக்கிறது என்பதற்காக அவர்கள் குற்றம் செய்தாலும் விட்டுவிடுவதில்லை. அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஒருவர் சட்டத்தை கையில் எடுத்து ஒருவரை தாக்குகிறார் என்றால் நீங்கள் கொலை மற்றும் கற்பழிப்புக்கு ஆதரவு வழங்குபவராக கருதப்படுவீர்கள். ஏனெனில் கத்தியால் குத்துவதும் வன்புணர்வு செய்வதும் ஒருவரை அடிப்பது போன்று பெரிய விஷயமாகாது என்று ஆகிறது. எனவே உங்கள் மனசாட்சியை ஆழமாக ஆராய்ந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.