“நீங்க டைம் எடுத்து கத்துக்கிட்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாத்துற வரைக்கும் தமிழ்நாடு தாங்காது CM சார்!” என்று தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கிக் கிளம்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கேள்வி எழுப்பி , கோட்டை வட்டாரத்தை அதிரவைத்துள்ளது!
கடலூரில் 25 வயது இளம்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சாடியுள்ள உதயநிதி, “இந்த #SofaModelஅரசு அமைஞ்சதுல இருந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைன்னு குற்றங்கள் நடக்காத நாளே இல்லை; தேர்தல் பிரச்சாரத்துல பேப்பரை வச்சு சட்டம் ஒழுங்கு பத்தி வாய்கிழிய பஞ்ச் டயலாக் பேசினவர், சிஎம் ஆனதும் ‘டீப் ஸ்லீப் மோடுக்கு’ போய்ட்டாரு” என அதிரடியாகக் கிழித்தெறிந்துள்ளார்.
மேலும், பெண்கள் பாதுகாப்புக்கான ‘சிங்கப்பெண்கள் படை’ தொடக்க விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள அவர், “பேரையும் யூனிஃபார்மையும் மாத்துறதுதான் நீங்க சொன்ன மாற்றமா.. நிகழ்ச்சியைத் தள்ளி வச்சிருக்கீங்களா, இல்ல அந்த முயற்சியையே கைவிட்டுட்டீங்களா? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட இன்னும் உங்களுக்கு எவ்வளவு அவகாசம் வேணும்?” எனச் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியை எற்படுத்துகிறது.
இப்படி தொடர்ச்சியா நடக்குற குற்றச்சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்குன்ற ஒன்னு இருக்கா இல்லையான்னு மக்களுக்கு சந்தேகம் வருது.
இந்த #SofaModelஅரசு…
— Udhay (@Udhaystalin) May 29, 2026
“>
