குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனராக பல படங்களை இயக்கியவர் கிரண். கடந்த வாரம் மஞ்சள் காமாலை பாதிப்பால் இவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அவரது தங்கையும் நடிகையுமான சுஜிதா சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். நீங்கள் எனக்கு சகோதரர் மட்டும் இல்லை தந்தையும் ஹீரோவும் கூட. மறுபிறவி இருந்தால் நீங்கள் மீண்டும் பிறந்து உங்கள் கனவுகளை அடைய வேண்டும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.