திருச்சியில் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்திற்கு நீண்ட நேரமாக பஸ் வராததால், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படி நடந்து சென்றபோது, அந்த கொடுமையான வெயிலைத் தாங்க முடியாமல் தாய் ஒருவர் வழியிலேயே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்த தகவல் துணை சபாநாயகர் ரவிசங்கரின் கவனத்திற்குச் செல்ல, அவர் நேரடியாக அந்த பேருந்து நிறுத்தத்திற்கு அதிரடியாக விசிட் அடித்தார்.

பகலில் பொதுமக்கள் பட்ட அவதியை நினைத்து ஆக்ரோஷமானவர், அங்கிருந்த போக்குவரத்துத் துறை அதிகாரிகளைச் சுற்றிலும் வளைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்க ஆரம்பித்தார். “அடிக்குற வெயில்ல ஒரு அம்மா மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க.. நீங்கெல்லாம் ஒரு அதிகாரியா..?” என்று அவர் கேட்ட கேள்வி மொத்த பேருந்து நிறுத்தத்தையும் அதிர வைத்தது.

​திடீரென என்ட்ரி கொடுத்து அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்த துணை சபாநாயகர், “இதே இடத்துல 2 கிலோமீட்டர் உங்களை நடக்க வச்சா நடப்பீங்களா? உங்க வீட்டு பெண்கள் தான் இப்படி நடப்பாங்களா? பொதுமக்களுக்கு ஏன் இந்த நிலைமை?” என அடுத்தடுத்து கேள்விகளால் துளைத்தெடுத்தார்.

பேருந்து இயக்கத்தில் அலட்சியம் காட்டிவிட்டு, அவரது இந்த அதிரடி ரெய்டிலும் ஆவேசக் கேள்விகளிலும் சிக்கிய அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். துணை சபாநாயகர் ரவிசங்கர் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அதிகாரிகளை வெளுத்து வாங்கிய இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது.