முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் விஜயின் முன்னாள் மேலாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி செல்வகுமார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று இணைந்தார். இவர் புலி படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் கட்சியில் இணைந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நடிகர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கும் மக்களுக்கும் சேவை செய்வாரா என்பது தெரியவில்லை.

அவரவர்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்வாரா என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது. இதனால்தான் பொதுமக்களுக்கு சேவை செய்வதற்காக திமுக கட்சியில் இணைந்துள்ளதாக அவர் கூறினார். நம்மை சுற்றி நல்லவர்கள் இருந்தால் எல்லாம் நல்லதாக நடக்கும். மேலும் நிலவு ஒருநாள் அம்மாவாசை ஆகும் என தமிழக வெற்றி கழகத்தை விமர்சித்தார்.