பாமக கட்சியின் தலைவர் அன்புமணி 2026 தேர்தலை முன்னிட்டு போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளார். பாமக கட்சியில் தந்தை மகனிடையே மோதல் போக்கு நிலவும் நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அன்புமணியை தலைவராக அறிவித்தது.
இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு விசாரணையின் போது இரு தரப்பிலும் பிரச்சனைகள் இருப்பதாக தெரிந்தால் தேர்தலில் சின்னம் முடக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக பாமகவில் சலசலப்பு நிலவும் நிலையில் தற்போது அந்த கட்சியின் தலைவர் அன்புமணி 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவித்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை ஆறு மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே காங்கிரஸ், அதிமுக மற்றும் பாமக ஆகிய காட்சிகள் விருப்பமனு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
