தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 2026 தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புதுச்சேரியில் பொதுக்குழு கூட்டத்தை பிரமாண்டமாக விஜய் நடத்தி முடித்தார். 2026 தேர்தலில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட இருக்கும் நிலையில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் செங்கோட்டையன் மற்றும் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அவர் பல நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்துள்ளனர். அதன்படி நெல்லை தவெக வர்த்தகர் அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மற்றும் வள்ளியூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தவெக நிர்வாகிகள் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கிரகாம்பெல் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளனர். மேலும் அவர்களை திமுகவின் துண்டை அணிவித்து கிரகாம்பெல் வரவேற்றார்.