தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் மத்தியில், நிலங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள் 118 பேரை உடனடியாக வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியர் மூலம் நாளை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அரசுப் பணியில் உள்ளவர்களின் தாத்தாக்கள், பாட்டன் மற்றும் தந்தை காலத்திலிருந்து சாகுபடி செய்துவந்த நிலங்களை, உச்ச நீதிமன்றம் இப்போது ‘ஆக்கிரமிப்பு’ என வகைப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர்களின் வாரிசுகளாகிய தற்போதைய அரசு ஊழியர்கள் அனைவரையும் ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி வெளியேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறில்லையெனில், சம்பந்தப்பட்ட துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எந்த வகையில் நீதி அல்லது நியாயம் என்ற கேள்வி எழுகிறது? நாடு முழுவதும் இதே முறையைப் பின்பற்றினால், பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளையோ அல்லது நிலங்களையோ இழக்கும் அபாயம் ஏற்படும். பல தலைமுறைகளாக நிலத்தில் வாழ்ந்து, சாகுபடி செய்து வருபவர்களுக்குப் பட்டா வழங்காததற்குக் காரணம் யார்? முன்னோர்களின் நிலங்களுக்குப் பட்டா வழங்கத் தவறிய ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? வன உரிமைச் சட்டம் அமலில் இருந்தும், அதனைச் செயல்படுத்தத் தவறிய அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

“>

 

நீதிபதிகள் இதனை ஆக்கிரமிப்பு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்த்தால் அது ஆக்கிரமிப்பாகத் தெரியும்; மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதநேயக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் மட்டுமே உண்மை விளங்கும். இந்த அநீதிக்கு எதிராக நீங்கள் ஒற்றுமையுடன் நிற்பீர்களா? என கேள்விகளை எழுப்பினர்கள்.