வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் அங்கு சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருகிறார். அந்த சிறிய நாட்டில் மக்கள் தொகை 2.6 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி கிம் கண்கலங்கியுள்ளார். இது குறித்து அவர் பேசிய போது நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் அதிக குழந்தைகளை பெண்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதன் மூலமாகத்தான் நாட்டை பாதுகாக்க முடியும். பிறக்கும் குழந்தைகளை நன்றாக பராமரிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான கல்வியை வழங்க வேண்டும். அதனை செய்ய நான் தயாராக உள்ளேன் எனக் கூறியுள்ளார். குழந்தை பிறப்பு பற்றி கிம் ஜாங் உன் பேசிக் கொண்டிருந்தபோது கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த காணொளியானது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.