கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிஃபா வைரஸால் எச்சரிக்கப்பட்ட மத்திய சுகாதாரத்துறை, வைரஸை கட்டுப்படுத்த ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த நிதி கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள ஆய்வகங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

வைரஸ் நோய் கண்டறிதல் பரிசோதனைகளுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அமைச்சர் மன் சுக் மாண்டவியா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.