எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்திருக்கின்ற ”இந்தியா” கூட்டணி மூத்த தலைவர் சரத் பவார் இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தி இருந்தார்கள். அதில் பல முக்கிய முடிவுகளை அவர்கள்  எடுத்திருக்கின்றார்கள். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மொத்தம் 13 பேர் ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் கலந்து கொள்ள முடியவில்லை.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி கலந்துகொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் அமலாக்கத்துறை அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது, எனவே அமலாக்க துறை அலுவலகம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. மற்ற  12 பேர் இந்த கூட்டத்தில் கலந்து இருக்கிறார்கள். பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றது.

அதில் மிக முக்கியமான ஒன்று உடனடியாக தொகுதி பங்கீடு விஷயங்களை அவர்கள்  தொடங்குவது என்ற முடிவை எடுத்து இருக்கிறார்கள். ஒருவேளை தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்படலாம் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது.  தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் குறிப்பாக அதிமுகவின் சார்பில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி சந்திக்க இருக்கின்றார். இப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் இருக்கின்றது. ஒருவேளை தேர்தல் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டால் தொகுதி பங்கீடுகளை முடித்து வைக்க வேண்டும் என்பது அவர்களது முதல் முடிவாக இருக்கின்றது. மற்றபடி முதற்கட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் முதல் கட்ட பிரச்சாரத்தை அவர்கள் தொடங்க இருக்கிறார்கள்.  முதற்கட்ட பிரச்சாரம் மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.