சமூக வலைதளங்களில் அவ்வப்போது வினோதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு நபர் உயிருள்ள பாம்பின் தலைப்பகுதியில் சிறிய ரக கேமரா ஒன்றை பொருத்தி, அந்தப் பாம்பு காடு மற்றும் புதர்களுக்குள் செல்லும் காட்சிகளைப் படம்பிடித்துள்ளார்.

பொதுவாகவே பாம்புகளைக் கண்டால் அலறி ஓடும் மக்களுக்கு, இந்தப் பாம்பின் கண்ணோட்டத்திலேயே உலகத்தைப் பார்ப்பது போன்ற காட்சிகள் மிகுந்த ஆச்சரியத்தையும் அதே சமயம் ஒருவித நடுக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. “பாம்பு என்னதான் பார்க்கும்?” என்ற பலரது நீண்ட கால ஆர்வத்திற்கு இந்தப் பதிவு விடை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by VAIBHAV SHIVHARE (@neuralreelai)

“>

இந்த வீடியோவில் பாம்பு மிகக் குறுகிய வளைவுகள், செடி கொடிகள் மற்றும் தரைப்பகுதிகளில் மிக வேகமாக ஊர்ந்து செல்லும் காட்சிகள் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளன. குறிப்பாக, அது இரையைத் தேடி நகரும் விதமும், தரையில் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ப அதன் வேகம் மாறுபடுவதும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “பாம்பின் உலகம் இவ்வளவு மர்மமானதாக இருக்குமா?” என வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். வழியாகத் பகிரப்பட்ட இந்தத் தனித்துவமான வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்து வருகிறது.