வெறும் இரண்டரை வயதே ஆன ஒரு குழந்தை, தனது உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தைக் கண்டு இணையதளமே வியந்து போயுள்ளது. பொதுவாகக் குழந்தைகள் மிட்டாய் வாங்கக் காசு கேட்பார்கள், ஆனால் இந்தக் குழந்தை சிறுகச் சிறுகச் சேர்த்த தொகை, ஒரு நடுத்தர வர்க்கத்தினரின் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ வைரலாகி வரும் நிலையில், இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தச் சேமிப்பைப் பார்த்து நகைச்சுவையாகக் கருத்துத் தெரிவிக்கும் மக்கள், “இந்தப் பணம் அண்டை நாடான பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே!” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nishav thakur (@nishav_baby)

“>

இந்நிலையில் “எங்களுக்கெல்லாம் சேமிக்கத் தெரியவில்லை, இந்தப் பிள்ளையிடம் தான் பாடம் கற்க வேண்டும்” என்றும் பலர் பதிவிட்டு வருகின்றனர். பிஞ்சு வயதிலேயே சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்திய பெற்றோரை ஒருபுறம் பாராட்டினாலும், அந்த உண்டியலில் இருந்த பெரும் தொகையைக் கண்டு பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.