சமூக வலைதளங்களில் நாள்தோறும் பல வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் மட்டுமே நம் மனதிற்கு மிக நெருக்கமாக அமைகின்றன. அந்த வகையில், தற்போது இணையவாசிகளின் இதயங்களை வென்று வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறிய பெண் குழந்தை தனது பெற்றோரிடம் மிகவும் ஆக்ரோஷமாகவும் அதே சமயம் மிக அழகாகவும் ஏதோ ஒரு விஷயத்திற்காக வாதிடுகிறார்.
மேலும் மழலை மொழியில் அவர் பேசும் அந்த ‘வாதம்’ யாருக்கும் புரியவில்லை என்றாலும், அவர் காட்டும் முகபாவனைகளும், கைகளை அசைத்து அவர் நியாயம் கேட்கும் தோரணையும் பார்ப்பவர்களைப் புன்னகைக்க வைக்கிறது. கோபத்திலும் அந்த குழந்தையின் கியூட்னஸ் குறையாததே இந்த வீடியோ இவ்வளவு வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
Whatever she said, I agree with her😂 pic.twitter.com/hSPqpCGRSm
— Nitin singh (@nitinnnn045) February 27, 2026
“>
இந்நிலையில் “இவர்தான் எதிர்காலத்தின் சிறந்த வழக்கறிஞர்” என்றும், “குழந்தையின் கோபமே இவ்வளவு அழகாக இருக்கிறதே” என்றும் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர். தர்க்கம் புரியாத வயதிலும், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த அந்தக் குழந்தை காட்டும் தீவிரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எ
