மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நிகழ்ந்த ஒரு விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போரை உறைய வைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவன் மீது கார் ஒன்று ஏறிச் சென்றது. பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருந்த அந்த விபத்தில், அந்தச் சிறுவன் அதிசயமாக உயிர் தப்பியதோடு, விபத்து நடந்த சில நொடிகளிலேயே எழுந்து நின்றது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“>

சஞ்சய் அகர்வால் என்பவரது ஓட்டுநர் ஓட்டி வந்த அந்த கார் ஏறியதில், சிறுவனுக்குக் காலில் மட்டும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் கார் உரிமையாளர் அகர்வால் சிறுவனை மீட்டு உடனடியாக பம்பாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதோடு, தனது ஓட்டுநரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

தற்போது ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.