சமூக வலைதளங்களில் அதிரடி காட்டும் இந்த வீடியோவில், சுமார் 5 அல்லது 6 பேர் சேர்ந்து தூக்க வேண்டிய ஒரு பிரம்மாண்டமான மரக்கட்டையை, ஒரே ஒரு நபர் தனது முதுகில் சுமந்து கொண்டு அசால்ட்டாக நடந்து செல்கிறார். பக்கத்தில் இருப்பவர்கள் லேசாக முட்டுக் கொடுத்தாலும், அந்த முழு பாரத்தையும் அந்த நபர் தாங்குவதைப் பார்த்தால் நிஜமான ‘பாகுபலி’யையே நேரில் பார்த்தது போல இருக்கிறது.

​எக்ஸ் (X) தளத்தில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பழங்காலத்தில் பிரமிடுகளை இப்படித்தான் கட்டியிருப்பார்கள் போல!” என்று வியக்கின்றனர். அதே சமயம், “இவ்வளவு எடையைத் தூக்க மெஷின்களையோ அல்லது டிராலியையோ பயன்படுத்தலாமே, முதுகு என்னவாகும்?” என்று அந்த நபரின் உடல்நலம் குறித்தும் கவலை தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, அந்த மனிதரின் அசாத்திய பலம் இப்போது இணையத்தையே மிரள வைத்துள்ளது!