ஜூன் 17ஆம் தேதி ஆனி அமாவாசை மற்றும் நாளை பிரதோஷம் ஆகிய விசேஷங்களை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகா லிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஜூன் 18ஆம் தேதி வரை நான்கு நாட்கள் சதுரகிரிக்கு பக்தர்கள் மலையேறி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இரவில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.