இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை ஒட்டி உள்ள கடல் பகுதி வழியாக இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் சென்றால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஏற்கனவே இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான கப்பல் ஒன்று இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தபோது கடத்தியுள்ளனர். அதேபோன்று போர்க்கப்பல் இஸ்ரேலுக்கு சென்று கொண்டிருந்தபோது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நார்வே நாட்டுக் கொடியுடன் வந்து கொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் தாக்கப்பட்ட கப்பலுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஏமனில் தங்களுக்கான ஆதரவை அதிகரிக்க தான் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.