இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும் என்று பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலை நிறுத்தல் என்ற தீர்மானம் மத்திய கிழக்கு ஐக்கிய நாடுகள் பொது சபையின் அவசரகால அமர்வில் கொண்டுவரப்பட்டது.

இந்த போர் நிறுத்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. அதன்படி இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவாகவும் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட 10 நாடுகள் எதிராகவும் இந்த தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளனர். அதோடு அர்ஜென்டினா உக்கரைன் உள்ளிட்ட 23 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகியுள்ளன.