விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் மக்களுக்கு தெரிந்த போட்டியாளர்கள் பலரும் பங்கேற்று உள்ளனர். அதன்படி நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர், நான் வீட்டுக்கு போறேன் என் அம்மா கூட இருக்க விடுங்க என்று கதறி அழுதுள்ளார். நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் என்று அடையாளத்துடன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இவர் இந்த சீசனில் ஆரம்பம் முதலில் சிறப்பாக கேம் ஆடி வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாகவே பிக் பாஸ் இல்லத்தில் சாப்பிடுவதும் தூங்குவதுமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இனி இருக்க முடியாது என்னை வெளியே விட்டு விடுங்கள் என்று அவர் கதறி அழுதுள்ளார்.