ஹைதராபாத் நகரத்தின் அழகையும் வளர்ச்சியையும் புகழ்ந்து, துபாயுடன் ஒப்பிட்டு பேசும் ஒரு ரஷ்யப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
‘க்சேனியா ஷகிர்சியானோவா’ என்ற ரஷ்ய யூடியூபர் ஹைடெக் சிட்டி, சுத்தமான சாலைகள், உயரமான கட்டிடங்கள், சூரிய அஸ்தமனத்தின் காட்சிகள் என ஹைதராபாத் நகரத்தின் நவீன அடையாளங்களை அழகாக படம் பிடித்து, “ஹபீபி… இது துபாய் அல்ல, இது ஹைதராபாத்” என்ற வாசகத்துடன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட் 25ஆம் தேதி பகிரப்பட்ட இந்த ரீல் தற்போது வரை 8 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.
View this post on Instagram
A post shared by Kseniia Shakirzianova (@vegkseniia)
“>
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பெருமை கலந்த கமெண்டுகளை பகிர்ந்துள்ளனர். “ஒரு வெளிநாட்டவர் நம் நகரத்தை பாராட்டுவது நம்மை மகிழ்விக்கிறது” என ஒருவர் கூற, மற்றொருவர் “இது ஹைதராபாத்தின் ஒரு பக்கமே, முழு நகரம் இப்படி இல்லை” என விமர்சித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பலரிடமும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
