விலங்குகளின் நகைச்சுவையான செயல்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன. தற்போது, ஒரு பாம்பு செய்த அசாதாரண செயல் இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
குறித்த வீடியோவில், தரையில் வைக்கப்பட்டுள்ள மொபைல் போனில் ஓர் போஜ்புரி திரைப்பட பாடல் ஒலிக்கிறது. அதை பாம்பு சில நொடிகள் கேட்டு, திடீரென திரைக்கு அருகில் தனது நாக்கைப் பயன்படுத்தி, செல்போனின் ஒரு பொத்தானை அழுத்துகிறது. இதையடுத்து பாடல் நின்றுவிடுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “பாம்புக்கு அந்தப் பாட்டுப் பிடிக்கவில்லையாம், அதனால்தான் ஆட்டோமேட்டிக்கா ஸ்டாப் பண்ணிவிட்டது” என வேடிக்கையாக கருத்து தெரிவிக்கின்றனர்.
लगता है नाग बाबा को ये भोजपुरी गाना पसंद नहीं आया, तभी इसने बंद कर दिया🤣
बस यही देखना रह गया था,, pic.twitter.com/yfwiEm5IB3
— Adv.Nazneen Akhtar (@NazneenAkhtar23) August 25, 2025
“>
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இதுவரை 1.77 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பலரும் வீடியோவின் கமெண்ட் பகுதியில் கமெடியில் கலக்குகிறார்கள். ஒருவர், “இந்த பாம்பு வேறே மாநிலத்து பாம்பு போல இருக்கே” என்று சிரிக்க வைத்துள்ளார். மற்றொருவர், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
